
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், விஜய் அதில் ஆர்வம் காட்டாமல் இருந்தார். விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியைப் பதிவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்நிலையில் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ அல்லது வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் விஜேய் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விஜேய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக எஸ் ஏ சந்திரசேகர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


