
புஸ்பாகொமின் சோதனையில் தேர்ச்சிப் பெற வேண்டுமென்றால் பள்ளிப் பேருந்துகளின் பம்ப்பரில் நீல வர்ணத்தைப் பூச வேண்டும் என்ற புதிய நிபந்தனை வெளியிடப்பட்டதாகக் கூறப்படுவதைப் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் மறுத்தார். தற்போதுள்ள நடப்பு விதிமுறை கடந்த 34 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. தங்களின் பள்ளிப் பேருந்துகளின் பம்ப்பரில் அதன் நடத்துனர்கள் நீல நிற சாயம் பூச வேண்டும் என்ற உத்தரவை அமலாக்கத் தரப்பினரும் வெளியிட்டதே இல்லை என்றார். வழக்கம்போல் பள்ளிப் பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும் என்றும் BAS SEKOLAH என்ற வார்த்தை கருப்பு கலரில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.


