27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நிந்தனை, பொக்கா மற்றும் சோஸ்மா சட்டம் மீண்டும் மறுபரிசீலனை

🔥 Views : 6
👁 Reading Now : 57

மக்களின் அமைதி, பாதுகாப்பை உயர்த்துவதில் பொருத்தம் மற்றும் பலனை உறுதிப்படுத்த குற்றவியல் சட்டம் உட்பட சில குறிப்பிடச் சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளன. அவற்றில் 1959 குற்றச்செயல் தடுப்புச் சட்டமான பொக்கா, 2012 பாதுகாப்புக் குற்றச் சட்டமான சொஸ்மா, 2015 வன்முறைத் தடுப்புச் சட்டமான பொடா மற்றும் 1957 குற்றவியல் சட்டம் ஆகியவை அடங்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார். இதே போல் 1948 நிந்தனை சட்டம், 1984 அச்சுப்பொறி மற்றும் வெளியீடு சட்டம் ஆகியவையும் மறுபரிசீலனைச் செய்யப்படும் என்று அவர் சொன்னார். மக்களின் பாதுகாப்பையும் நாட்டின் அமைதியும் வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. மேலும் லஞ்சத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்படும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles