23.9 C
Kuala Lumpur
Wednesday, September 30, 2026

Vetri

அம்னோ வேண்டாம் என்றால் பெர்சத்து கட்சிக்கு பாதிப்பில்லை

🔥 Views : 33
👁 Reading Now : 27

வரும் 15ஆவதுப் பொதுத்தேர்தலில் பெரிக்காத்தானுடன் இணைந்து கொள்ளாமல் அம்னோ தன் வழியைத் தேடிக் கொண்டுச் சென்றால் அதற்காக பெர்சது கவலைப்படாது என்று பெர்மாஸ் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ சே ஸக்காரியா முகமட் சாலே திட்டவட்டமாகக் கூறினார். ஜோகூர், பேரா மாநிலங்களுக்கு மந்திரி புசார் பதவிகளை விட்டுக் கொடுத்தது உட்பட அம்னோவுக்குப் பிரதமர் பதவியை விட்டுக் கொடுத்துப் பெரிய தியாகங்களை பெர்சத்து செய்துள்ளது. ஒருவேளை அந்த தியாகங்கள், விசுவாசத்திற்கு மதிப்பளிக்கா விட்டால் ஜோகூரிலுள்ள அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளிலும் அம்னோவை எதிர்த்து பெர்சத்துவும் பெரிகாத்தானும் போட்டியிடுவதுதான் நியாயமாகும். வரும் 15ஆவதுப் பொதுத்தேர்தலில் எங்களை ஆதரிக்கும் கட்சிகளுடன் மட்டும் பெர்சத்து இணைந்து செயல்படும். அதனால் பெரிக்காத்தானில் பெர்சத்து, பாஸ், ம.இ.கா., கெராக்கான் இடம் பெற்றுள்ளன என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles