29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

பேரா மாநிலத்தில் ஐந்து இடங்கள் சுற்றுலாத் தலங்களாக உத்தேசிக்க ஆலோசனை

🔥 Views : 33
👁 Reading Now : 37

பேரா மாநிலத்தில் ஐந்து பகுதிகளை சுற்றுலாத் தலங்களாக உத்தேசிக்க கலை,கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஆலோசனை வழங்கியிருப்பதாக மாநில வீடமைப்பு, சுற்றுலா துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ நோலீ அஸிலின் முகமட் ராட்ஸி கூறினார். புலாவ் பங்கோர், கிரிட்டர் ஈப்போ, ஜியோ பார்க் லெம்பா கிந்தா,தைப்பிங் மற்றும் தஞ்சோங் மாலிம் ஆகியவை அந்த பகுதிகளாகும். இந்த இடங்கள் யாவும் மாநிலத்தில் சிறந்த சுற்றுலா பகுதிகளாகும். ஈப்போ மாநகர் மன்றம்,தைப்பிங் ஆகியவை நமது சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் பங்கோர் தீவுக்கு சுற்றுலா முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தாலும் அனைத்து நடவடிக்கைகளும் முறையாக செய்யப்பட்ட பின்னரே அது திறக்கப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles