34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஆலயத்தை உடைக்க வருகிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டனர்! போலீசாரை தாக்கிய நால்வர் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 55

கோலாலம்பூரில் உள்ள சுங்கை பீசி சீனர் ஆலயத்தை உடைக்க வருகிறார்கள் என்று தவறாக புரிந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்வதற்கு ஏதுவாக புதிய சாலை அமைப்பதற்கு அங்கு மண் மன்வாரி இயந்திரம் வந்தது. ஆனால் சீனர் ஆலயத்தை உடைக்க இந்த மண்வாரி இயந்திரம் வந்திருப்பதாக தவறாக புரிந்து கொண்ட ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த சிலர் அந்த மண்வாரி இயந்திரத்தை சேதப்படுத்தினர். அங்கு கடமையிலிருந்த போலீசாரை நோக்கி தடியால் தாக்கினர். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முகமட் இஸாம் தெரிவித்தார். இதனிடையே அங்கு வந்து சேர்ந்த புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் போங் குய் லான் ,ஆலயத்தை உடைக்கிறார்கள் என்று தவறாகப் புரிந்து கொண்டதால் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததாக குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles