34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

61 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள ஹெரோயின் பறிமுதல்; ஆடவன் கைது

🔥 Views : 5
👁 Reading Now : 26

போதைப் பொருளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இரு வெவ்வேறு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் 36 வயது ஆடவனை கைது செய்த போலீசார், அவனிடமிருந்து 61,573 வெள்ளி மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருளையும் கைப்பற்றினர். செபெராங் பிறை ஜாலான் துன் ஹுசேன் ஓன் சாலை ஓரத்தில் மாலை 4 மணியளவில் ஆடவன் ஒருவனிடம் இரண்டு பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 907.3 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியதாக பாராட் டாயா மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்ட்டெண்டன் கமாருள் ரிசால் ஜெனால் கூறினார். அதே நாளில் இரவு 8 மணியளவில் பாயான் லெப்பாஸ் கோல்டன் ட்ரிங்கல்,ஆடம்பர அடுக்குமாடியின் கார் நிறுத்துமிடத்தில் கார் ஒன்றிலிருந்து 8 பொட்டலங்களில் வைக்கப்பட்டிருந்த 3 ,687 கிலோகிராம் ஹெரோயினை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் பொருட்டு சந்தேக நபர் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles