32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

நாங்கள் வாய்மூடி கிடந்து மக்களுக்கும் நாட்டிற்கும் துரோகம் செய்ய விரும்பவில்லை டத்தோஸ்ரீ அன்வார் திட்டவட்ட அறிவிப்பு

🔥 Views : 9
👁 Reading Now : 62

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தாக்கல் செய்த 12 ஆவது மலேசியத் திட்டத்தை கண்காணிக்க நாடாளுமன்ற சிறப்பு தேர்வுக் குழு அவசியம் என்று எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். அரசு மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவிடம் பொறுப்பு வழங்குவது குறித்து டத்தோஸ்ரீ அன்வார் நாடாளுமன்றத்தில் பேசினார். எனது பரிந்துரையை பிரதமர் திறந்த மனப்பான்மையையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தில் ஒப்பந்தங்கள் மற்றும் விவாதங்கள், பொருளாதார மீட்சி, மறுமலர்ச்சி உட்பட அனைத்து விஷயங்களையும் விரிவாக முன்வைக்கவும், கண்காணிக்கவும் இந்த குழுவால் முடியும். அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் கோடிக்கணக்கான மக்கள் பணம் இழக்கப்படும்போது நாங்கள் வாய் மூடி கிடந்து மக்களுக்கும், நாட்டுக்கும் துரோகம் செய்ய விரும்பவில்லை என்று அவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles