32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

11லட்சம் வெள்ளி அபராதம் இரு குற்றச்சாட்டுகளில் இருந்து அகமட் மஸ்லான் விடுதலை

🔥 Views : 6
👁 Reading Now : 56

முன்னாள் பிரதமர், டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடமிருந்து பெற்ற 20 லட்சம் வெள்ளி தொடர்பில் உள்நாட்டு வருமான வாரியத்திடம் தெரிவிக்காததோடு மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்திடம் போலி அறிக்கையைச் சமர்ப்பித்த 2 குற்றச்சாட்டுகளிலிருந்து அம்னோ தலைமைச் செயலாளர், டத்தோ அகமட் மஸ்லானை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர்,.11 லட்சம் வெள்ளி அபராதம் செலுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமாட் மஸ்லானுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுக்களையும் அரசு தரப்பு வாபஸ் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. முன்னதாக நஜீப்பிடமிருந்து தாம் பெற்ற உண்மையான வருமானமான 20 லட்சம் வெள்ளி தொடர்பில் வாரியத்தின் 2013ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி ரிட்டர்ன் படிவத்தில் டத்தோ அமாட் மஸ்லான் குறிப்பிடாதது 1967 வருமான வரிச் சட்டம், 113(1)(ஏ) பிரிவுக்கு எதிரானதாகும். இவர் இத்தொகையை ஒரு சட்டவிரோதமான செயலில் ஈடுபட்ட கிடைத்த வருமானத்திலிருந்து கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி பெற்று அதே நாளில் வங்கியில் காசோலையைப் போட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles