
பின்லாந்தில் நடைபெற்று வரும் 2020 -ஆம் ஆண்டுக்கான சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு மலேசியா தேர்வாகியது. நேற்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் மலேசிய அணி எகிப்து அணியை 5 – 0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 3 -2 எனும் புள்ளிகணக்கில் தோற்கடித்தது. நாளை வியாழக்கிழமை நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஜாப்பானை சந்திக்கிறது. இம்முறை சுடிர்மான் கிண்ண பூப்பந்து போட்டியில் மலேசியா சாதனைப் படைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
