31.6 C
Kuala Lumpur
Saturday, September 19, 2026

Vetri

வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை! அரசாங்கம் நீதியாக நடந்து கொள்ள வேண்டும்

🔥 Views : 31
👁 Reading Now : 51

வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் அரசாங்கம் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று பெங்கேராங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓஸ்மான் கடுமையாக வலியுறுத்தியுள்ளார். மலேசியா தாய்மார்களுக்கு வெளிநாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ததை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டுமென்று சுல்தான் ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். அப்படி இருக்கையில் மேல்முறையீட்டு மனுவை தொடர்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார். சபாநாயகர் அவர்களே, நீங்களும் ஒரு வழக்கறிஞர் நானும் ஒரு வழக்கறிஞர். இதில் இதுவரை நமக்கு ஒன்றும் புரியவில்லை. ஆகவே குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் பிரதமரும் அமைச்சர்களும் நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles