
அம்னோவுடன் பேச்சுவார்த்தையை பெர்சத்து கட்சி முறித்து கொள்ளவில்லை என்று பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் முகமட் ராபிக் தெரிவித்தார். அம்னோவுடன் பேச்சு வார்த்தை தொடர்கிறது. வரும் பொதுத் தேர்தலில் அம்னோவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். புதிய அரசாங்கத்தில் நாங்கள் பெற்றிருக்கிறோம். ஒருவேளை பெர்சத்துவை எதிர்த்து அம்னோ போட்டியிட்டால் நாங்களும் தயாராக இருக்கிறோம். அதேசமயம் எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பும் கட்சிகளுடன் ஒத்துழைப்போம் என்றார் அவர்.



