
பின்லாந்தின் நடைபெற்றுவரும் சுடிர்மான் கிண்ண பேட்மிண்டன் போட்டியில் மலேசியா குழுவுக்கு விளையாடி வரும் இளம் வீராங்கனை கிஷோனாவை இனத்துவேஷமாக முகநூலில் திட்டிய borhan Che Rahim என்பவரை நெட்டிசன்கள் மிகக் கடுமையாக சாடியுள்ளனர். இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மலேசியா 3 -2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கிஷோனா 21-20, 18-21, 19-21 என்ற புள்ளி கணக்கில் இந்தோனேசியாவின் ஜோர்ஜியா மார்ஸ்கா என்பவரிடம் கடுமையான போராட்டத்திற்கு பின்னர் தோல்வி கண்டார். Borhan che Rahim தனது முகநூலில் Bam kutip India (keling) dlm estate mana la jd pmain utama Malaysia என்று மிக மோசமாக குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. இவருக்கு எதிராக அரசாங்கம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.
