
மலாக்கா மாநிலத்தில் ஆட்சி கவிழ்ப்பு மற்றும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மலாக்கா மாநில ஆளுநரை சந்திக்க விண்ணப்பம் செய்யப்பட்டதாக கூறப்படுவதை கெஅடிலான் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்தார். மலாக்கா ஆளுநரை சந்திக்க நான் விண்ணப்பம் செய்யவில்லை. ஆளுநரிடம் இருந்து இந்த அழைப்பு வரவில்லை என்றார் அவர். இதனிடையே மலாக்கா மாநில மந்திரி பெசார் சுலைமான் முகமட் அலி மீது சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை கொண்டிருக்கிறார்கள். மலாக்காவில் ஆட்சி மாற்றம் என்பது அவர்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலாகும். மேலும் 4 சட்டமன்ற உறுப்பினர்களும் அணி தாவுவதற்கு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மலாக்கா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கும் எங்களுக்கும் எவ்வித சம்பந்தம் இல்லை என்று இதற்கு முன்னர் பக்கத்தான் ஹரப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.
