
இளம் பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனாவை இனத்துவேஷமாக முகநூலில் திட்டிய Borhan che Rahim என்பவர் பெர்சத்து கட்சியில் கிளாந்தான் பாசிர் மாஸ் உதவி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தனது செயலுக்காக அனைத்து மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். தனது முகநூலில் Bam kutip India (keling) dlm estate mana la jd pmain utama Malaysia என்று கிஷோனாவை மிக மோசமாக திட்டியுள்ளார். அவரது இந்த பதிவு ஒட்டுமொத்த மலேசிய இந்தியர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
