34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

கோம்பாக்கை சேர்ந்த 19 குடிசைவாசிகளுக்கு நிலப்பட்டா

🔥 Views : 9
👁 Reading Now : 48

மேம்பாட்டுத் திட்டத்திற்கு வழிவிடும் வகையில் குடியிருப்பை காலி செய்த கோம்பாக்கைச் சேர்ந்த 19 குடிசைவாசிகளுக்கு நிலப்பட்டா வழங்கப்பட்டுள்ளது சுங்கை துவா சட்டமன்றத் தொகுதிக்கு வருகை மேற்கொண்ட மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு 5ஏ பாரங்களை வழங்கினார். கம்போங் சுங்கை துவாவை சேர்ந்த 10 பேருக்கும் கம்போங் பெண்டஹாராவை சேர்ந்த 9 பேருக்கும் மாற்று நிலம் குவாங் மற்றும் பத்து ஆராங்கில் வழங்கப்பட்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் தெரிவித்தார். சுங்கை துவா வட்டாரத்திலுள்ள குடிசைவாசிகளின் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம். ஆற்றோரம் வசித்து வந்த அவர்கள் அடிக்கடி வெள்ளப் பிரச்னையை எதிர்நோக்கி வந்தனர் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles