25.3 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

தடுப்பூசி குறித்து தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பில் தவறான தகவல்கள் அடங்கிய காணொளி அல்லது செய்திகளை வளைத்தலங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தடுப்பூசித் திட்டம் சீராக நடைபெறுவதற்கு இடையூறாக அமைவதோடு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சத்தையும் ஏற்படுத்தும் என்று சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி எச்சரித்தார். தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற நாம் முயலும் இவ்வேளையில் இத்தகைய தவறான செய்திகள் இளையோர் சம்பந்தப்பட்ட தடுப்பூசித் திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles