28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ஜொகூரில் ஒரு நாடாளுமன்றம் இரண்டு சட்டமன்றம் இந்தியர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்!

🔥 Views : 15
👁 Reading Now : 48

நடப்பு அரசியல் சூழ்நிலையை உற்று நோக்கினால் நாட்டின் 15ஆவது பொதுதேர்தல் எந்த நேரத்திலும் நடைபெறலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். நிலைமை இவ்வாறிருக்க நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் ஜொகூர் மாநில ஜசெக இந்திய உறுப்பினர்களும் இம்முறை ஒரு நாடாளுமன்றம் இரண்டு சட்டமன்றமும் இந்தியர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்துள்ளனர். 1965ஆம் கட்சி தொடங்கபட்டது முதல் இந்தியர்கள் ஜசெகவுக்கு உறுதுணையாக இருத்துள்ளனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும், கட்சி பலவீனமாக இருந்த காலத்தில் இந்தியர்கள் ஜசெகவுக்கு துணையாக இருத்துள்ளனர் எனபதை மறத்து விட கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் கூட்டணியின் தோழமை கட்சியான கெஅடிலான் கடந்த 14ஆவது தேர்தலில் ஒரு நாடாளுமன்றம் இரண்டு சட்டமன்றம் இந்திய வேட்பாளர்களுக்கு வழங்கியது என்பது கூறிப்பிடதக்கது. அதே போன்று தேசிய முன்னணி அதன் தோழமை கட்சியான மஇகாவுக்கு 1 நாடாளுமன்றமும் 4 சட்டமன்றத்தையும் வழங்கியது என்பதை இங்கே கவனிக்கப் பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் அதிகமான இந்திய உறுப்பினர்கள் ஜொகூர் மாநிலத்தில் உள்ளனர் என்பதை கருத்தில் கொண்டு தங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும் என அவர்கள் ஏ.எஸ்.டி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles