
நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டது. தவளைகளின் விலை ஏறிவிட்டது என்று அம்னோ துணை தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் குறிப்பிட்டார். நிலைமை மோசமடைந்து கொண்டிருப்பதால் கட்சி தாவல் தடுப்பு சட்டம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அணி தாவுதை தடுத்தும் வகையில் உடனடியாக இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மக்கள் முடிவு செய்யும் வகையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் சொன்னார்.
