
மலாக்கா மாநில முதல்வருக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்டுள்ள சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் மற்றும் பந்தாய் குண்டோர் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஜ்மான் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மலாக்கா மாநில அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் தெரிவித்தார். டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மலாக்கா மாநில முதல்வருக்கு வழங்கிய ஆதரவை மீட்டுக் கொள்கிறோம் என்று அறிவித்ததால் நேற்று மலாக்கா மாநில அரசாங்கம் கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது
