
மலாக்கா மாநில முதல்வருக்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொண்ட சுங்கை ஊடாங் சட்டமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் மற்றும் பந்தாய் குண்டோர் சட்ட மன்ற உறுப்பினர் டத்தோ நூர் அஜ்மான் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்படும் கடிதம் இன்று கொடுக்கப்பட்டதாக அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் தெரிவித்தார். மலாக்கா மாநில முன்னாள் முதல்வர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் உட்பட நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மலாக்கா மாநில முதல்வர் சுலைமான் முகமட் அலிக்கு வழங்கி ஆதரவை மீட்டுக் கொண்டதால் மாநில அம்னோ அரசாங்கம் கவிழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


