31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

காடேக் சட்டமன்றத்தில் சாமிநாதன் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசம்

🔥 Views : 10
👁 Reading Now : 40

மலாக்கா காடேக் சட்டமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் ஜி. சாமிநாதன் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2018இல் நடந்த தேர்தலில் இவர் 307 வாக்குகள் வித்தியாசத்தில் ம இகா வேட்பாளர் பன்னீர் செல்வத்தை வீழ்த்தி வெற்றி பெற்று பின்னர் ஆட்சி குழுவில் இடம்பெற்றார். விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு வழங்கியதாக கூறி இவர் உட்பட 12 பேர் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 3 மாதத்துக்கு பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மலாக்கா மாநில ஆட்சி குழுவில் இடம்பெற்றபோது இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு சாமிநாதன் முன்னுரிமை வழங்கினார். மலாக்காவில் இந்து அறப்பணி வாரியம் அமைப்பதில் அதிக தீவிரம் காட்டினார். காடேக் சட்டமன்றத்தில் இவர் மீண்டும் போட்டியிடுவாரா என்பதை ஜசெக தலைமைத்துவம் முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles