31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

சமய போதகருக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்

🔥 Views : 8
👁 Reading Now : 52

மலேசியாவில் வாழ்கின்ற முஸ்லிம் அல்லாதோரின் மத்தியில் சினத்தை ஏற்படுத்தியுள்ள சமயப் போதகர் ஷகிர் நசோகாவை ஐஜிபி உடனே கைது செய்து புலன் விசாரனை மேற்கொள்ள வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி சட்ட ஆலோசகர் கார்த்திகேசன் சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார். தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சமயம் என்பது அனைவருக்கு உணர்ச்சிப்பூர்வமானது. ஒவ்வொரு மதமும் தங்கள் தனிப்பட்ட நம்பிக்கைகளைப் பொறுத்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், எந்த மதமும் மற்றவர்களை விட தங்கள் மதம் மேன்மையானது என மார்தட்டி கொள்ளமுடியாது, இது உலகளவில் ஏற்றுக்கொள்ளப் பட்ட நடைமுறை. எனவே, போலீஸ் படைத் தலைவர் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கார்த்திகேசன் வலியுறுத்தி உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles