34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

லங்காவி விடுமுறையில் போதைப்பொருளுடன் கொண்டாட்டம் -10 பேர் கைது

🔥 Views : 10
👁 Reading Now : 20

லங்காவி, பந்தாய் தெங்காவிலுள்ள ஒரு ஹோட்டலின் அறையில் கூடியிருந்த சுற்றுப்பயணிகள் 10 பேரை போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து குறிப்பிட்ட அளவிலான போதைப்பொருள், இருமல் மருந்து ஆகியவைக் கைப்பற்றப்பட்டதாக லங்காவி மாவட்ட போலீஸ் தலைவர் ஷாரிமான் அஷாரி தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் 23 முதல் 31 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். ஒரு கும்பலைச் சேர்ந்த ஆடவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக இருப்பதாகப் பொதுமக்கள் கொடுத்தத் தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் ஹோட்டல் அறையில் இருந்த வேளையில். 8 பாக்கெட் கெத்தமின் மற்றும் 2 இருமல் மருந்து போத்தல்களும் கைப்பற்றப்பட்டது. அனைவருக்கும் தலா 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles