32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

வேப் கடையில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவர் கைது

🔥 Views : 8
👁 Reading Now : 35

இராணுவப் படையின் சீருடை அணிந்த ஓர் ஆடவர் அம்பாங், தாமான் கெராமாட்டிலுள்ள வேப் கடையில் ஒரு பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டார் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர், ஏ.சி.பி. முகமட் பாரோக் இஷாக் தெரிவித்தார். இதில் சம்பந்தப்பட்ட 18 வயது கொண்ட அப்பெண்ணிடம் வேப் வாங்க விரும்பிய அவர், கடையிலிருந்து வெளியேறுவதற்கு முன் இச்செயலைப் புரிந்துள்ளார். அதன் பிறகு மீண்டும் கடைக்குள் நுழைந்த அவர் தாம் வாங்கிய வேப்பின் போட் சரியாக இயங்கவில்லை என்று கூறியதும் அதைச் சோதனை செய்து வேறொன்றை மாற்றிக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும் சமயத்தில் அப்பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டார். அங்கு சிசி.டி.வி. இருப்பதாக அப்பெண் கூறியதும் அவர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரைத் தேடும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. இச்சம்பவம் 354ஆவதுக் குற்றவியல் சட்டத்தின் விசாரணை செய்யப்படுகிறது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles