32.9 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சுடுநீர் ஊற்றி சிகரெட்டால் சூடு வைத்து இரு இந்திய சிறுவர்கள் கொடூர சித்திரவதை! 3 பேர் கைது!

🔥 Views : 7
👁 Reading Now : 42

ஜொகூர் ஸ்கூடாய் வட்டாரத்தில் 6 வயது சிறுவன் விஷ்வா மற்றும் 11 வயது சிறுவன் ஜெயசீலன் உடல்மீது சுடுநீர் ஊற்றி சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மூன்று பேரை கைது செய்திருப்பதாக இஸ்கண்டர் பூத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் dzulkhairi தெரிவித்தார். வேலை பளு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் பராமரிப்பாளரிடம் விட்டு சென்ற தனது இரு பிள்ளைகளும் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருப்பது தொடர்பில் அவரின் தாயார் விக்னேஸ்வரி போலீசில் புகார் செய்துள்ளார். இரு சிறுவர்கள் உடல் முழுவதும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிகிச்சைக்காக இவர்கள் ஜொகூர் சுல்தான் அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார். இதனிடையே இந்த இரு சிறுவர்களை மோசமாக சித்திரவதை செய்த நபர்களுக்கு எதிராக மிகக்கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று விக்னேஸ்வரி பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் அன்பரசு AST செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். சிறுவர்கள் சித்திரவதை செய்யப்படும் சம்பவம் ஒரு தொடர் கதையாக இருப்பதால் இதுபோன்ற குற்றங்களுக்கு கடும் தண்டதை விதிக்கப்பட வேண்டும் என்று ஜோகூர் மாநிலத்தை சேர்ந்த ஜசெக தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் பலராமன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles