27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மித்ரா கடன் தொடர்பில் அமைச்சர் ஹலிமா முழு விபரங்களைத் தர வேண்டும்! பத்து காஜா எம்பி சிவகுமார் கோரிக்கை

🔥 Views : 9
👁 Reading Now : 69

மித்ரா கடன் தொடர்பில் ஒற்றுமை துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முழு விபரங்களை முழுமையாக அறிவிக்கவேண்டும் என்று பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் எம் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். முந்தைய ஆண்டுகளின் திட்டங்களுக்கு கடனை செலுத்த வேண்டியிருந்ததால், கடந்த ஈராண்டுகளாக மித்ராவிற்கு முழுமையாக 10 கோடி வெள்ளி தொகை ஒதுக்கப்படவில்லை என கூறியிருக்கும் ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ Halimah அதன் தொடர்பில் முழுமையான விவரங்களை தர வேண்டும். இதன்தொடர்பில், ஒரு சந்திப்பை நடத்தி கடன் அடைக்க வேண்டியுள்ள திட்டங்களின் விபரங்களைத் தருவதோடு விளக்கம் அளிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். மக்களவையில் மித்ரா நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர் ஹலிமா வழங்கியிரக்கும் விளக்கம் மனநிறைவளிக்கும் வகையில் இல்லையென சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles