25.7 C
Kuala Lumpur
Saturday, September 26, 2026

Vetri

40 ஆண்டுகால வட்டியோடு போட்ட பணத்தை பணத்தை திருப்பித் தாருங்கள்! மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்கள் கோரிக்கை

🔥 Views : 41
👁 Reading Now : 55

இந்திய சமுதாயத்தை பொருளாதாரத்தில் உயர்த்தப் போகிறது என்று 40 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட மைக்கா ஹோல்டிங்ஸ் எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்பதால் எங்கள் பணத்தை 40 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து திருப்பி தாருங்கள் என்று மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இறந்தவர்கள், பங்கு பத்திரத்தை தொலைத்தவர்கள் மற்றும் பணத்தை மீட்டு கொள்ள மறுத்தவர்கள் இன்னும் ஆயிரக்கணக்கில் உள்ளனர். இவர்களுக்கு வட்டியோடு சேர்த்து பணத்தைத் திருப்பித் தரும்படி மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர் எஸ்கே மகேஷ் கேட்டுக் கொண்டார். மைக்கா ஹோல்டிங்ஸ் நம்பி ஏழை இந்திய சமுதாயம் 100 கோடியை முதலீடு செய்தது. ஆகவே எஞ்சியிருக்கும் பங்குதாரர்களுக்கு வட்டியோடு சேர்த்து பணத்தை திருப்பிக் கொடுத்தால் அது கோடி புண்ணியம் என்று மகேஷ் தெரிவித்தார். இன்று நடைபெற்ற சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பில் டத்தோஸ்ரீ மெய்யழகன், மணியரசு மற்றும் பங்குதாரர்களான பி. மலையாண்டி, பெருமாள் குழந்தை வேலு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles