28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

ஜொகூரில் இரு இந்திய சிறுவர்கள் சித்திரவதை! கணவன் மனைவி கைது

🔥 Views : 15
👁 Reading Now : 70

ஜொகூர் ஸ்கூடாயில் 6 வயது சிறுவன் விஷ்வா மற்றும் 11 வயது சிறுவன் ஜெயசீலன் உடல்மீது சுடுநீர் ஊற்றி சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவன் மனைவியை போலீஸார் கைது செய்திருப்பதாக இஸ்கண்டர் பூத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் dzulkhairi தெரிவித்தார். நேற்று இந்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டனர். இப்போது பராமரிப்பாளர்கள் என்று கூறப்படும் கணவன் மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர் என்றார் அவர். தனது இரு பிள்ளைகளும் மோசமாக துன்புறுத்தப்பட்டு இருப்பது தொடர்பில் அவரின் தாயார் விக்னேஸ்வரி போலீசில் புகார் செய்துள்ளார். இரு சிறுவர்கள் உடல் முழுவதும் மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. இவர்கள் ஜொகூர் சுல்தான் அமினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles