29.6 C
Kuala Lumpur
Monday, October 13, 2025

Vetri

527 தமிழ்ப்பள்ளிகளில் வெறும் 6 பள்ளிகளுக்கு மட்டுமே மடிக்கணினிகள்! அம்பலப்படுத்தினார் தியோ நீ சிங்!

நாட்டில் 527 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் ஆறு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மணி கணினிகள் வழங்கப்பட்டிருப்பது ஏன் என்று முன்னாள் துணை கல்வி அமைச்சர் தியோ நீ சிக் என்று கேள்வியை எழுப்பினார். மத்திய அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது ஏன் என்று கேள்ளியை எழுப்பிய அவர் வெறும் ஆறு பள்ளிக்கு மட்டுமே மணி கணினிகள் வழங்கப்பட்டது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக சுட்டிக்காட்டினார். Srjk tun Aminah பள்ளிக்கு 215 கணினிகள், srjk ladang timiang 11 கணினிகள், srjk ladang chembong 21 கணினிகள், srjk barathi 46 கணினிகள், srjk Mahatma Gandhi kalasalai 75 கணினிகள் மற்றும் srjk telok merbau 38 கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்ப்பள்ளிகளில் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பயிலும் வேளையில் வெறும் 406 மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் வழங்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என அவர் கேட்டார். பக்கத்தான் ஹராப்பான் ஆட்சியின்போது தமிழ் பள்ளிகளுக்கு 5 கோடி மானியம் ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரிக்கத்தான் நேஷனல் அரசாங்கம் 2021 ஆம் பட்ஜெட்டில் தமிழ்ப்பள்ளிகளுக்கு 2 கோடியே 89 லட்சம் வெள்ளியை மட்டுமே மூழ்கியது. இப்போது மணிக் கணினிகள் வழங்குவதிலும் தமிழ்ப் பள்ளிகள் புறக்கணிக்க பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles