27.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

527 தமிழ்ப்பள்ளிகளில் 6 பள்ளிகளுக்கு மட்டுமே மடிக்கணினி; தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஓரக் கண்ணால் பார்ப்பது ஏன்?

🔥 Views : 10
👁 Reading Now : 62

நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 150,000 மடிக்கணினிகளை அரசாங்கம் வழங்கும் என்று அறிவித்தது. ஆனால் நாட்டில் 527 தமிழ்ப்பள்ளிகளில் 6 பள்ளிகளை சேர்ந்த 406 மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் மட்டுமே வழங்கப் பட்டதாக வெளிவந்த செய்தி பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார். தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த மடிக்கணினிகள் எத்தனை? தமிழ்ப்பள்ளிகளுக்கு இம்மடிக்கணினிகள் எப்போது வழங்கப்பட்டும் என்று இந்திய சமுகத்தில் இந்த கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதுவரை வெறும் 406 தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மணிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்றார் அவர். தமிழ்ப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் அதிகமானோர் B-40 வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். ஆகவே, இம்மடிக்கணினிகள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு உடனடித் தேவையாக உள்ளதை அறிந்து அரசாங்கம் மடிக்கணினிகளை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles