31.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மலாக்கா மாநிலத் தேர்தலை ஒத்தி வைப்பதுதான் நியாயம்

🔥 Views : 8
👁 Reading Now : 47

நாட்டில் கோவிட் தொற்றின் நிலை இன்னும் தணியாதிருப்பதால் மலாக்கா மாநிலத் தேர்தலை ஒத்தி வைப்பதுதான் சிறந்தது என்று அம்னோ துணைத் தலைவர், டத்தோஸ்ரீ முகமட் ஹாசான் வலியுறுத்தினார். ஒருவேளை தேர்தல் உறுதியாக நடத்தப்பட்டால் நாட்டிற்கும் மக்களுக்கும் அதனால் ஏற்படக்கூடிய் பாதிப்புகள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களிடம் கருத்துகளை அரசு மற்றும் தேர்தல் ஆணையமும் பரிசீலிப்பதுதான் இந்த விவகாரத்தில் நியாயமானதாகக் கருதப்படுகிறது. இதில் கடந்தாண்டுப சபா மாநிலத் தேர்தலை நடத்திய போது கோவிட் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்ததை போல் மீண்டும் உயர்ந்து விடுமா என்றுதான் மக்கள் அஞ்சுகின்றனர். தற்போது முழுமையாகத் தடுப்பூசிச் செலுத்திக் கொண்ட பெரியவர்களின் விகிதம் 90 விழுக்காட்டை எட்டி விட்டாலும் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை திடீரென்று உயரக்கூடிய சாத்தியம் இன்னும் உள்ளது என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles