29.4 C
Kuala Lumpur
Tuesday, April 21, 2026

Vetri

நானும் ஒரு சராசரி மனிதர்தான் இனத்துவேஷத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டேன்!

நானும் ஒரு சராசரி மனிதர் தான். அந்த வகையில் எனக்கு எதிரான இனத்துவேச தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என்று தேசிய பேட்மிண்டன் வீராங்கனை கிஷோனா பெரும் வேதனையுடன் தெரிவித்தார். இதிலிருந்து விடுபட்டு உபர் கிண்ணப் போட்டியில் கவனம் செலுத்த விரும்புகிறேன். உபர் கிண்ணப் போட்டியில் மலேசியாவிற்கு வெற்றியை தேடித்தரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நானும் ஒரு சராசரி மனிதன் என்பதால் பெரிதும் பாதிக்கப்பட்டேன். இருப்பினம் இந்த விவகாரத்தை மலேசிய பேட்மிண்டன் சங்கம் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பிடம் விட்டுவிட்டேன் என்றார் அவர். 2019 மணிலா சி போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இளம் வீராங்கனை கிஷோனாவுக்கு எதிராக அரசியல் பிரமுகர் ஒருவர் கடந்த வாரம் முகநூலில் இனத்துவேச வார்த்தைகளினால் கடுமையாக திட்டினார். தனது செயலுக்காக மன்னிப்பு ஏற்றுக்கொண்டாலும் போலீசார் அவருக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles