
மீரா எனப்படும் மலேசிய சிறுபான்மை உரிமை செயல் கட்சியின் சிலாங்கூர் மாநில துணைத் தலைவராகவும், சிலாயாங் தொகுதி தலைவராகவும் நாடறிந்த சமூக சேவையாளருமான டாக்டர் கே. ஸ். பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். மீரா கட்சியின் சிலாங்கூர் மாநில தலைவர் லெட்சுமனன் இப்போது மாநிலத்தில் ஏராளமான கிளைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் தொகுதி தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் மீரா கட்சியின் தேசிய தலைவர் கே.பி. சாமி மற்றும் சிலாங்கூர் மாநில தலைவர் லெட்சுமணன் ஆகியோர் என் மீது நம்பிக்கை வைத்து சிலாங்கூர் மாநில துணைத் தலைவராக நியமனம் செய்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டாக்டர் பாஸ்கரன் தெரிவித்தார். இன்று நாடு தழுவிய அளவில் மீரா கட்சி புதிய கிளைகளை அமைத்து வெற்றிநடை போடுகிறது. அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியும் மீராவின் உதவித் தலைவர்களான டத்தோ குமார் அம்மன் மற்றும் சிப்பாங் மணியம் ஆகியோர் கட்சிக்கு முதுகெலும்பாக உள்ளனர். எனது சேவை இந்த கட்சியின் மூலாமாக மக்களுக்கு தொடரும் என்று டாக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.



