29.8 C
Kuala Lumpur
Tuesday, June 2, 2026

Vetri

இந்திய சமுதாயத்துக்கு லிம் குவான் எங் எதையுமே செய்யவில்லையா வன்மையாக சாடினார் ராயுடு

🔥 Views : 6
👁 Reading Now : 48

ஜசெக தலைமை செயலாளர் லிம் குவான் எங் இந்திய சமுதாயத்திற்கு எதையுமே செய்யவில்லை என்று பரப்பப்படும் காணொளியை இந்தியர் குரல் தலைவர் ராயுடு சாடினார். பினாங்கு மாநில முதல்வராக அவர் பதவி ஏற்றதும் .கம்போங் புவா பாலா குடியிருப்பாளர்களுக்கு அழகான வீடுகள் கட்டிக் கொடுத்தார். ஆண்டுதோறும் தமிழ் பள்ளிகளுக்கும் ஆலயங்களுக்கும் மிகப்பெரிய மானியத்தை ஒதுக்கினார். நிலம் இல்லாத தமிழ் பள்ளிகளுக்கு நிலங்களை உறுதி செய்தார். இரண்டு தவணைகளாக இவர் பினாங்கு மாநில முதல்வராக இருந்தபோது இந்திய சமுதாயத்தில் பல வகையில் உதவிகள் புரிந்தார். நிதி அமைச்சராக பதவி ஏற்ற போது தமிழ்ப் பள்ளிகளுக்கு 5 கோடி வெள்ளியும் மித்ராவுக்கு 10கோடி வெள்ளியும் ஒதுக்கினார். பினாங்கு மாநில மாநில முதல்வராகவும் நிதி அமைச்சராகவும் இருந்தபோது அவர் இந்திய சமுதாயத்தை சிறந்த முறையில் கவனித்துக் கொண்டார். மேலும் பினாங்கு மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கம்ம் வெறும் 10 வெள்ளியில் கலிடோனியா தோட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி வருகிறது தமிழ் பள்ளிகளுக்கான கணினி மற்றும் மின்னணு சாதனங்கள் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது, பினாங்கு மாநிலத்திலுள்ள ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி மானியங்கள் மற்றும் நிபோங் திபால், லாடாங் சுங்கை கெச்சிலில் தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுத் திட்டத்தை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles