29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

செபராங் ஜெயா டென்னிஸ் மைதானத்தின் தரம் உயர்த்தும் பணிகள் நிறைவு

🔥 Views : 7
👁 Reading Now : 68

பட்டர்வொர்த் செபராங் ஜெயா சோனி காம்ப்ளெக்சில் உள்ள டென்னிஸ் மைதானம் சுமார் ஒரு லட்சம் வெள்ளி செலவில் தரம் உயர்த்தப்பட்டது. கடந்த 2021 செப்டம்பர் 23 ஆம் தேதி அதன் சீரமைப்புப் பணிகள் முழுமைப் பெற்றதாக பினாங்கு மாநில இளைஞர் மற்றும் விளையாட்டு ஆட்சிமன்ற உறுப்பினர் சூன் லிப் சீ கூறினார். அனைத்துலக டென்னிஸ் மன்றத்தின் விதிகளுக்கு ஏற்ப சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றார். பினாங்கு இருக்கும் பெரும்பாலான டென்னிஸ் மைதானங்கள் தனியார் நிறுவனங்களிடம் உள்ளது. அதனை பயன்படுத்துவதற்கு முன்னதாக கட்டணங்களை செலுத்த வேண்டும். மாநிலத்தில் விளையாட்டுத் துறைக்கு தேவையான வசதிகளை செய்து கைகொடுக்க மாநில அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதற்கு ஏற்ப தாமும் மாநிலத்திலுள்ள விளையாட்டு மைதானங்களை கண்காணித்து உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக சூன் லிப் சீ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles