29 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

சிலாங்கூர் மாநில பட்ஜெட் தயாரிப்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள்

🔥 Views : 7
👁 Reading Now : 40

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்பர் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். இம்முறை வரவு செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் மாறுபட்ட முறையில் நடைபெறும். அவை தனித்தனியாகவும் வேறு வித வடிவிலும் நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார். வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்துக்களை பெறுவதற்காக சட்டமன்ற உறுப்பினர்களுடன் சந்திப்பு நடத்தினோம். அவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததோடு மாநில அரசின் நிலை அல்லது ஒதுக்கீட்டின் உண்மை நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினையும் பெற்றனர் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles