26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

தவாஸ் தரம் உயர்த்தப்படும் சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

🔥 Views : 6
👁 Reading Now : 58

இளம் பாலகர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தாவாஸ் எனப்படும் சிலாங்கூர் மைந்தர் வாரிசு நிதித் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார். இத்திட்டத்தை தரம் உயர்த்துவதற்காக முதலீட்டுத் தொகுப்புகளை சிலாங்கூர் அரசு தயார் செய்துள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டில் தாவாஸ் திட்டத்தை தொடக்கிய போது பயனாளிகள் 1,500 வெள்ளியைப் பெறுவர் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், வாக்குறுதியளித்தபடி நிதி ஒதுக்கீட்டை ஏற்பாடு செய்ய முடியாததால் அத்திட்டத்தை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles