26.4 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

மடிக்கணினிகள் வழங்கும் விவகாரம்! தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கிள்ளுக்கீரைகளா? ஜேம்ஸ் செல்வராஜா கேள்வி

🔥 Views : 7
👁 Reading Now : 26

நாட்டில் 527 தமிழ் பள்ளிகள் உள்ளன. இதில் ஆறு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே மடிக் கணினிகள் வழங்கப்பட்டிருக்கும் செய்திகள் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது என்று அரிமா இயக்கத்தின் விலாயா மாநிலத் தலைவர் ஜேம்ஸ் செல்வராஜா குறிப்பிட்டார். மத்திய அரசாங்கத்தால் தமிழ்ப்பள்ளிகள் புறக்கணிக்கப்படுவது ஏன் என்ற கேள்ளியை எழுப்பிய அவர் வெறும் ஆறு பள்ளிக்கு மட்டுமே மடிக்கணினிகள் வழங்கப்பட்டது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது என்றார். SRJK(T) Tun Aminah பள்ளிக்கு 215 கணினிகள், SRJK(T) Ladang Timiang 11 கணினிகள், SRJK(T) Ladang Chembong 21 கணினிகள், SRJK(T) Barathi 46 கணினிகள், SRJK(T) Mahatma Gandhi Kalasalai 75 கணினிகள் மற்றும் SRJK(T) Telok Merbau 38 கணினிகள் என்று மொத்தம் 406 மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்ப்பள்ளிகளில் 80,000 மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இதில் வெறும் 406 மாணவர்களுக்கு மட்டுமே மடிக்கணினிகள் வழங்கப்பட்டது எந்த வகையில் நியாயம் என்று ஜேம்ஸ் செல்வராஜா கேள்வி எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles