
நாட்டில் இதுவரை 2 கோடியே 10 லட்சத்து 3 ஆயிரத்து 74 பேர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையை 90 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை அடைய இன்னும் 0.6 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது. நாட்டில் இதுவரை 2 கோடியே 21 லட்சத்து 76 ஆயிரத்து 018 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
