28.5 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

ம.சீ.ச. உறுப்பினரை மிரட்டிய சம்பவம்; சிங்கப்பூரின் உதவியை ஜோகூர் போலீஸ் நாடியுள்ளது!

🔥 Views : 10
👁 Reading Now : 32

அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் 2 கார்கள் மற்றும் வீட்டிற்கு சிவப்பு சாயம் பூசப்பட்டதைத் தொடர்ந்து ம.சீ.ச. புகார் மற்றும் பொதுச்சேவைப் பிரிவுக்கானத் துணைத் தலைவர், சுவான் ஜியான் பூன் மிரட்டப்பட்டச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ சிங்கப்பூர் போலீசாரின் உதவியை ஜோகூர் போலீஸ் நாடியுள்ளது . ஜொகூர் மாநில போலீஸ் தலைவர், டத்தோ அயூப் கான் மடின் பிச்சை இதனைத் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட நபர்கள் சிங்கப்பூரின் தொலைபேசி எண்கள் மற்றும் வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி உள்ளனர். இது தொடர்பில் புலன் விசாரணைக்காக நாங்கள் சிங்கப்பூர் போலீசாரின் உதவியை நாடியிருக்கிறோம் என்று அவர் கூறினார். ஏன் விரைந்து தீர்வுக் காணவில்லை என்று ஏராளமானோர் குறை சொல்வார்கள். ஆகவே இந்த புகார் தொடர்பாக சிங்கப்பூர் போலீசாரின் உதவியை நாடி இருப்பதாக அவர் சொன்னார்..

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles