25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

எங்களையும் புறக்கணிக்க வேண்டாம்! பிரதமருக்கு இந்திராகாந்தி வேண்டுகோள்

முன்னாள் கணவரால் கடத்திச் செல்லப்பட்ட என் இளைய மகளை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட வேண்டுமென்று பாலர் பள்ளி ஆசிரியை இந்திரா காந்தி பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை கேட்டுக் கொண்டுள்ளார். முன்னாள் அட்டர்னி ஜெனரல் டான்ஸ்ரீ தோமி தோமஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர் முகமட் அடிப் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் சிறப்புக் குழுவை அமைக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது. மகள் பிரசன்னா என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இதுநாள் வரை அவர் ஒப்படைக்கப்படவில்லை. என் முன்னாள் கணவரை கைது செய்வதற்கும் போலீஸ் படைத் தலைவருக்கு கூட்டரசு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மூன்று போலீஸ் படைத் தலைவர்கள் மாறிவிட்டனர். ஆனால் என் மகள் இதுநாள் வரை ஒப்படைக்கப்படவில்லை என்று இந்திரா காந்தி வேதனையோடு தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles