29 C
Kuala Lumpur
Tuesday, September 29, 2026

Vetri

மித்ரா நிதி தவறாக கையாளப்பட்டதா? ஊழல் தடுப்பு ஆணையத்தின் புகார் செய்யுங்கள் அமைச்சர் ஹலிமாவுக்கு பொன் வேதமூர்த்தி சவால்

🔥 Views : 36
👁 Reading Now : 43

மித்ரா நிதி தவறாக கையாளப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யும்படி ஒற்றுமை துறை அமைச்சர் ஹலிமாவுக்கு முன்னாள் அமைச்சர் பொன். வேதமூர்த்தி சவால் விடுத்துள்ளார் அமைச்சராக பதவி வகித்தபோது தாமும் மித்ராவின் தலைமை இயக்குனரும் மித்ரா நிதியை அங்கீகரித்தாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார். தலைமை கணக்காய்வாளர் அலுவலகம், நிதி அமைச்சு, பிரதமர் துறை மற்றும் அரசாங்க தலைமைச் செயலாளருடன் கலந்துரையாடல் நடத்தி வெளிப்படையான முறை ஒன்றை அமைத்தோம். மித்ராவின் நிதியை பெறுவோர் பற்றி மலேசியா ஊழல் தடுப்பு ஆணையத்திடம் விளக்கம் அளித்ததோடு பிரகடன பாத்திரத்திலும் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இறுதியாக இந்த மித்ரா நிதியை அங்கீகரிக்கும் கட்டுப்பாட்டு அதிகாரியாக பிரதமர் துறையின் துணை தலைமை செயலாளர் இருந்தார் என்று செனட்டர் பொன். வேதமூர்த்தி சுட்டிக்காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles