25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குப் பத்திரத்தை தொலைத்தவர்கள் போலீசில் புகார் செய்து பணத்தை மீட்கலாம்

மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்கள் தங்களது பங்கு பத்திரத்தை தொலைத்திருந்தால் அது தொடர்பில் பொலீசில் புகார் செய்து பங்கு பணத்தை மீட்டுக் கொள்ளலாம் என்று ஆலோசனை கூறப்பட்டுள்ளது. மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களுக்கு மீண்டும் பணம் கிடைப்பதில் மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.கே. மகேஷ் போராடி வருகிறார். இந்நிலையில் தம்மை தொடர்பு கொண்ட பல பங்குதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் பங்கு பணம் பத்திரம் தொலைந்து விட்டதாக குறிப்பிட்டனர் என்று எஸ்கே மகேஷ் தெரிவித்தார். உடனடியாக மைக்கா ஹோல்டிங்ஸ் liquidator அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினேன். பங்கு பணத்தை தொலைத்தவர்கள் மற்றும் காலமாகிவிட்ட பங்குதாரர்களின் வாரிசுகள் உடனடியாக போலீசில் புகார் செய்யும்படி ஆலோசனை வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட எஸ்கே மகேஷ் குறிப்பிட்டார். உண்மையான பங்குதாரர்கள் மற்றும் அவரின் வாரிசுகள் மட்டுமே போலீஸ் புகார் செய்து அதன் நகலை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கும்படி ஆலோசனை கூறப்பட்டது. அந்த வகையில் இன்னமும் பணத்தை மீட்காமல் இருக்கும் மைக்கா ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களின் குறிப்பாக பங்கு பத்திரத்தை தொலைத்தவர்கள் அல்லது அவர்களின் வாரிசுதாரர்கள் உடனடியாக போலீசில் புகார் செய்து அந்த நகலை 016-2438176 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்கலாம். மேல் விபரங்களுக்கு இந்த எண்ணில் அழைத்துப் பேசலாம் என்று எஸ்கே மகேஷ் கேட்டுக் கொண்டார். இதனிடையே மைக்கா பங்கு பணத்தை மீட்டு கொள்ளாமல் இருக்கும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட மைக்கா பங்குதாரர்களுக்கு அந்தப் பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என்பதில் persatuan harmoni சங்கத்தின் அமைப்பாளர் டத்தோஸ்ரீ மெய்யழகன் மற்றும் அதன் தலைவர் மணியரசு ஆகியோரும் உதவி வருவதாக தெரிவித்தார் எஸ்.கே. மகேஷ் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles