
பண்டோரா பேப்பர்ல ஆவணங்கள் தொடர்பில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பொறாமைப்பட வேண்டாமென்று கோத்தா ராஜா நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சாபு கேட்டுக்கொண்டார். டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இனியும் இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டாம். அரசியல்வாதிகள் கோடிக்கணக்கில் பணம் சேர்ப்பது தொடர்பில் பொறாமைப்படுவதை அவர் விட்டுவிட வேண்டும். பணத்தை எப்படி சேர்க்கலாம் என்பதை நாமும் கற்றுக்கொள்வோம். அமைச்சர் ஒருவர் 90 கோடி வெள்ளியை வங்கியில் வைத்திருக்கிறார். 20 லட்சம் வெள்ளியை போக்கேட் மணி என்கிறார். முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தாயாருக்கு நூறுகோடி வெள்ளியை வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே நாம் போறாமை படுவதை விடுத்து பணத்தை எப்படி சேர்க்க முடியும் என்பதை பற்றி யோசிப்போம் என்று முகமட் சாபு நகைச்சுவையாக கூறியபோது நாடாளுமன்றம் கலப்பலப்பாக காணப்பட்டது.



