25.2 C
Kuala Lumpur
Sunday, July 12, 2026

Vetri

தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மடிக்கணினிகள் எங்கே! ஐபிஎப் கட்சி கேள்வி

🔥 Views : 14
👁 Reading Now : 38

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இந்த இக்கட்டான நேரத்தில் அரசாங்கத்தின் பாராபட்ச போக்கு பெரும் வருத்தம் அளிப்பதாக ஐபிஎப் கட்சி தெரிவித்துள்ளது. மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புரக்கணிக்கப்பட்டுனர் என்ற செய்தி பெரும் வேதனையை அளிக்கிறது. 1 லட்சத்து 50,000 மடிகணினிகளில் வெறும் 406 மடிக்கணினிகள் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது எந்த வகையில் நியாயம். அப்படி என்றால் 1 லட்சத்து 49,594 மடிக்கணினிகள் மற்ற பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? இதனை ஐபிஎப் வன்மையாக கண்டிக்கிறது என்று அதன் தேசிய துணை பொதுச்செயலாளர் கணேசன் கூறினார்.* *15வது பொதுத்தேர்தல் நெருங்கி வரும் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கல்வியமைச்சின் இந்த போக்கு இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாராபட்சமான செயல் அரசாங்கத்தின் மலேசிய குடும்பம் எனும் நிலைப்பாடிற்கு விரோதமான செயலாகும் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles