25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மித்ரா நிதி விவாகரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க அசோஜனுக்கு துனிச்சல் உள்ளதா?

மித்ரா நிதி விவகாரத்தில் தன்னை சம்பந்தப்படுத்தி கூறும் நபர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க அசோஜன் துணிச்சல் உள்ளதா என ஜொகூர் ஜசெக கிளைத் தலைவர் சந்திர சேகரன் சவால் விடுத்துள்ளார். கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் மித்ரா நிதி ஒதுக்கீடு குறித்து பல அரசியல் தலைவர்கள் பற்றி செய்திகள் வந்த வண்ணமாக உள்ளது. அதில் மஇகாவின் தேசிய பொது செயளாளரரும் ஜொகூர் மாநில முன்னாள் தலைவரும்,புக்கிட் காம்பீர் சட்டமன்ற முன்னாள் வேட்பாளருமான அசோஜனின் பெயரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது என்பது அனைவரும் அறந்த ஒன்றே! அதனை தொடர்ந்து அசோஜன் காணொலியின் வாயிலாக தன் மீது புகார் கூறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என குரல் பதிவு ஒன்று செய்துள்ளார். அந்த நிதி விவகாரத்தில் சம்பந்தம் படவில்லை என போலிஸ் புகார் செய்துள்ள அஜோசன், சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது வழக்கு தொடர துணிச்சல் இருக்கிறதா என்று சந்திர சேகரன் சாவல் விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles