29.4 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

அரைத்த மாவை மீண்டும் அரைக்காமல் மித்ரா செலவழித்த பணத்திற்கான ஆதாரத்தை அமைச்சர் ஹலிமா காட்ட வேண்டும் சார்லஸ் சந்தியாகோ சவால்

🔥 Views : 7
👁 Reading Now : 20

ஒற்றுமை அமைச்சர் ஹலிமா ஹலிமா , கோவிட் -19 தொற்று நோய் காலக்கட்டத்தின் போது ஏழை இந்திய பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த ஒரு அரசியல் கட்சியின் கீழ் இயங்கும் ஆராய்ச்சி குழுவிற்கு 91 லட்சம் வெள்ளி நிதி வழங்கிய தகவல் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது. இங்கே எழும் கேள்வியே, ஒரு ஆராய்ச்சி மையம் ஏன் ஆன்லைன் கல்வி வகுப்புகளை நடத்துகிறது? ஏழை மாணவர்கள் பெரும்பாலோர் மடிக்கணினி வசதி இல்லாமலும் அல்லது இணையத்தை அணுக முடியாதபோது இது அர்த்தமற்றது என தெளிவாகிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். மித்ராவின் நிதி எவ்வாறு செலவிடப்பட்டன என்பது பற்றி எழுப்பப்பட்ட எங்களின் சட்டபூர்வமான கேள்விகளுக்கு ஹலிமாவின் பதில்கள் தெளிவாக இல்லை. நாட்டில் உள்ள தமிழ்ப் பாலர் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது கடன்கள் அடைக்க மித்ரா பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரைத்த மாவை அரைக்காமல் சுற்றி வளைக்காமல் அவர் யார் யாருக்கு மித்ரா பணம் எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதை அறிவிக்க வேண்டும் என சந்தியாகோ கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles