
கோவிட் நோய்த்தொற்று தாக்கம் தொடர்ந்து இருப்பதால் இவ்வாண்டு பினாங்கு மாநிலத்தில் தீபாவளி கார்னிவேல் இல்லை என்று செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல் தெரிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜவுளி கடை வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் தீபாவளி கார்னிவல் நடத்தப்பட்டால் அவர்கள் மிகப்பெரிய பாதிப்பை எதிர் நோக்குவார்கள். இதனை கருத்தில் கொண்டும் நோய்த்தொற்று தாக்கத்தையும் கவனத்தில் கொண்டும் தீபாவளி கார்னிவேல் இல்லை என்று அவர் சொன்னார். பினாங்கு மாநில லிட்டில் இந்தியாவில் ஜவுளிக்கடைகள் வழக்கம்போல் திறந்திருக்கும் என்பதால் பொதுமக்கள் தீபாவளிக்கு தேவையான புத்தாடைகளை அங்கு வழங்கிய கொள்ளலாம் என்றார் அவர்.



