29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

J -kom நிறுவனத்திற்கு அதிக மானியம் ஒதுக்கினால் 2022 பட்ஜெட்டை பக்கத்தான் புறக்கணிக்கும்

🔥 Views : 9
👁 Reading Now : 68

சர்ச்சைக்குரிய j – kom என்ற சமூக தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய மானியம் ஒதுக்கப்பட்டால் 2022 பட்ஜெட்டை பக்கத்தான் ஹரப்பான் புறக்கணிக்கும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ மற்றும் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சின் ஆகியோர் எச்சரித்தனர். 2021 பட்ஜெட்டில் இந்த நிறுவனத்திற்கு 8 கோடியை 55 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பக்கத்தான் ஹரப்பான் எம்பிக்கள் கொடுத்த நெருக்குதல் காரணமாக அந்த நிதி 4 கோடியாக குறைக்கப்பட்டது. 2022 பட்ஜெட்டில் அந்த நிறுவனத்துக்கு மீண்டும் மிகப் பெரிய நிதி ஒதுக்கப்பட்டால் பட்ஜெட்டை பக்கத்தான் ஹரப்பான் புறக்கணிக்கும் என்று அவர்கள் எச்சரித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles